;
Athirady Tamil News

நிலக்கரி விவகாரம்; சி.ஐ.டியில் முறைப்பாடு

0

2009 ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பாக முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரி, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்படுள்ளது.

அது தொடர்பில் ஜனாதிபதி செயலாளர் இன்று (11) முற்பகல் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.

இலங்கைக்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக கணக்காய்வு அறிக்கைகளிலும், பாராளுமன்றத்திலும் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்களைக் கருத்திற்கொண்டு இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.