;
Athirady Tamil News

ஏப்ரல் 15 அரச அலுவலகங்கள் இயங்கும்; அமைச்சு அறிவிப்பு

0

எதிர்வரும் ஏப்ரல் 15, 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் அனைத்து அரசாங்க அலுவலகங்களும் வழமை போன்று திறந்திருக்கும் என பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.

குறித்த திகதிகளில் அரச ஊழியர்களுக்கு இணையவழியில் (Online) பணியாற்றுவதற்கு முன்னதாகத் திட்டமிடப்பட்டிருந்தது.

பொதுமக்களுக்கான சேவைகளை வினைத்திறனாகவும் தடையின்றியும் வழங்குவதை உறுதிப்படுத்தும் நோக்கில், முந்தைய தீர்மானத்தை மாற்றி அனைத்து அலுவலகங்களையும் வழமை போல் திறக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.