;
Athirady Tamil News

பல மாகாணங்களில் நாளை கடும் வெப்பமான வானிலை

0

இலங்கையின் பல மாகாணங்களில் நாளை கடும் வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், சபரகமுவ, தெற்கு மற்றும் கிழக்கு ஆகிய மாகாணங்களுடன் மொனராகலை மாவட்டமும் இந்த எச்சரிக்கை வலயத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

21 மாவட்டங்களில் சில இடங்களில் ‘அவதான மட்டம்
மனித உடலில் உணரப்படும் வெப்பத்தின் அளவு நாட்டின் 21 மாவட்டங்களில் சில இடங்களில் ‘அவதான மட்டம்’ வரை அதிகரிக்கக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மேலும், அதிக வெப்பமான சூழலில் நீண்ட நேரம் தங்கியிருப்பவர்களுக்கு உடல் சோர்வு ஏற்படக்கூடும் என்றும், தொடர்ந்து கடினமான பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு தசைப்பிடிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தற்காத்துக்கொள்ள தாகம் எடுக்காவிட்டாலும் அடிக்கடி போதியளவு நீர் அருந்த வேண்டும். முடிந்தவரை நேரடி வெயிலைத் தவிர்த்து நிழலான இடங்களில் ஓய்வெடுக்க வேண்டும்.

கடினமான வெளிப்புற வேலைகளைக் குறைத்துக்கொள்வதுடன், பணியிடங்களில் அடிக்கடி இடைவேளை எடுத்துக்கொள்ள வேண்டும். மெல்லிய, வெள்ளை அல்லது இளநிறத்திலான பருத்தி ஆடைகளை அணிவது சிறந்தது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.