வடக்கில் உள்ள ஊழல்வாதிகளுக்கு எதிராக எதிர்வரும் மாதங்களில் நடவடிக்கை
;
ஜனாதிபதி அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஒரு போதும் தனது நோக்கத்தில் இருந்து தவறாது. ஜனாதிபதி அநுர மேற்கொண்ட நடவடிக்கையால் இன்று இலங்கைக் கிரிக்கெட் சபை தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது.
ஊழலுக்கு எதிராக நடவடிக்கைகள் தெற்கில் இடம்பெறுவதைப்போன்று வடக்கில் ஏன் இடம்பெறுவதில்லை? என்று எம்மிடம் பலர் கேள்வி எழுப்பி யுள்ளனர். அவர்களின் கேள்வி நியாயமானது. கவலைப்பட வேண்டாம். தெற்கில் எத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டதோ அவ்வாறே, வடக்கிலுள்ள ஊழல்வாதிகள், மோசடியாளர்கள், ஆக்கிரமிப்பாளர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
வடமாகாணத்தில் பல பிரச்சினைகள் உள்ளன என்பதை நாங்கள் ஏற்கிறோம். அவற்றை நாங்கள் சடுதியாகத் தீர்த்துவைக்க முற்பட்டால், வங்குரோத்து அடைந்துள்ள அரசியல்வாதிகள் மேலெழும்ப எத்தனிப்பார்கள்.