மட்டக்களப்பில் பறிபோகும் உயிர்கள் ;அச்சத்தில் மக்கள்
மட்டக்களப்பு – கரடியநாறு எரலாங்குளம் பகுதியில், காட்டு யானை தாக்கியதில் 76 வயதுடைய முதியவர் ஒருவர் இன்று 04.காலை பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
எரலாங்குளம் கிராம அலுவலர் பிரிவில் உள்ள நவுண்டனியமாடு பகுதியில் அமைந்துள்ள நெல் வயல்களில், பயிர்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போதே இன்று காலை சுமார் 08:00 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உயிரிழந்தவர் மாவடிவேம்பு 02, நௌக்கராசு தெருவைச் சேர்ந்த 76 வயதுடைய ஆறுமுகம் கண்டுமணி என அடையாளம் காணப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று அதிகாலையிலேயே நடந்திருக்கலாம் என கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியநாறு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். மட்டக்களப்பில் யானை – மனித மோதல் அதிகரித்து வரும் நிலையில், முதியவர் ஒருவர் இவ்வாறு உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.