;
Athirady Tamil News

தமிழக தேர்தல் முடிவு ; யாழில் பறக்கும் த.வெ.க கொடிகள்!

0

தமிழக தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், யாழ்ப்பாணம் – காக்கைதீவு பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. தமிழக தேர்தல் முடிவுகளானது சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில் பல தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகமானது முன்னணி வகிக்கின்றது. அந்தவகையில் தமிழகத்தில் விஜயின் ஆதரவாளர்கள் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு இதுவரை வெளியான முடிவுகளில் 108 தொகுதிகளில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றுள்ளது.

234 தொகுதிகளில் பெரும்பான்மை பெற 118 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் எனும் நிலையில் தனிப்பெரும் கட்சியாக தவெக வென்றுள்ளது. அடுத்த இடத்தில் திமுக உள்ளது. மூன்றாவது இடத்தில் அதிமுக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.