டி.வி.கே கட்சியின் வெற்றிக்கு இந்திய பிரதமர் வாழ்த்து
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற டி.வி.கே கட்சி மற்றும் அதன் தலைவருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட சமூக ஊடக பதிவில் தனது வாழ்த்து செய்தியை தெரிவித்துள்ளார்.
இதன்படி அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
தேசிய ஜனநாயகக் கூட்டணி
“தமிழக சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவளித்த தமிழக வாக்காளர்களுக்கு நன்றிகள்.
மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதிலும், அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதிலும் நாங்கள் எப்போதும் முன்னணியில் இருப்போம்.
டி.வி.கே-யின் சிறப்பான செயல்பாட்டிற்கு வாழ்த்துகள்.
தமிழகத்தின் முன்னேற்றத்தையும், அதன் மக்களின் நல்வாழ்வையும் முன்னெடுத்துச் செல்வதில் மத்திய அரசு தனது முழு முயற்சியையும் செலுத்தும்.” என கூறியுள்ளார்.
