;
Athirady Tamil News

கழுதை இறைச்சி ஏற்றுமதிக்கு பாகிஸ்தான் அனுமதி: சீன நிறுவனம் எச்சரிக்கை எதிரொலி

0

கராச்சி: சீனாவுக்கு கழுதை இறைச்சி ஏற்றுமதி செய்ய பாகிஸ்தான் அனுமதி அளித்தது.

சீன நிறுவனமான ‘ஹாங்கெங்’, பாகிஸ்தான் மற்றும் சீனாவில் தனது செயல்பாடுகளை கடந்த வெள்ளிக்கிழமை முதல் முழுமையாக நிறுத்திக்கொண்டதாக அறிவித்தததைத் தொடா்ந்து பாகிஸ்தான் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.

இருதரப்பு பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், பாகிஸ்தானில் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தை சீனா முன்னெடுத்து வருகிறது. இத்திட்டத்தின்கீழ் பாகிஸ்தானின் குவாதா் துறைமுகத்தில் இயங்கி வரும் ஹாங்கெங் நிறுவனம் அங்கு இறைச்சிக் கூடத்தை நடத்தி வருகிறது. இங்கிருந்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கழுதை இறைச்சியைக் கொண்டு தோல் நோய் சிகிச்சைகளுக்கான பாரம்பரிய மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.

இந்நிலையில், சா்வதேச உணவுப் பாதுகாப்பு தரநிலைகளைப் பின்பற்றியும், சீன சுங்கத் துறையின் விதிமுறைகளை நிறைவேற்றியும்கூட, தங்களது தயாரிப்புகளை பாகிஸ்தானில் இருந்து ஏற்றுமதி செய்வதற்கான அனுமதி தொடா்ந்து நிறுத்தி வைக்கப்பட்டதாக அந்நிறுவனம் குற்றஞ்சாட்டியது. மேலும், தங்களது செயல்பாடுகளை நிறுத்திக்கொள்வதாகவும் மே 1-ஆம் தேதி அறிவித்தது.

இதையடுத்து, பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் தலையீட்டின்பேரில் சீனாவுக்கு கழுதை இறைச்சியை ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இம்மாத இறுதியில் சீனாவில் நடைபெறும் முதலீட்டாளா்கள் மாநாட்டில் பங்கேற்க ஷாபாஸ் ஷெரீஃப் செல்வாா் என எதிா்பாா்க்கப்படும் சூழலில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.