;
Athirady Tamil News

முன்னாள் ஆசிரியருக்கு சாரதியாக மாறிய ஜனாதிபதி புதின் ; வைரலாகும் வீடியோ

0

ரஷியாவில் கடந்த 09 ஆம் திகதி வெற்றி தினவிழா கொண்டாட்டங்கள் நடந்தன.

இதில் அரசு சார்பில் முக்கிய விருந்தினர்களுக்கு கிரெம்ளின் மாளிகையில் விருந்து நடைபெற்றது.

இந்நிலையில், வெற்றி தினவிழாவில் கலந்துகொள்ள வந்த 92 வயதான வேரா குரேவிச் என்ற ஆசிரியரை ரஷ்யா ஜனாதிபதி புதின் ஓட்டலில் இருந்து காரில் அமரவைத்து தானே அந்தக் காரை ஓட்டியும் வந்தார்.

ஜனாதிபதி புதின் தனது முன்னாள் ஆசிரியரை அர்பாத் ஹோட்டலில் இருந்து பிக்கப் செய்து, கிரெம்ளினில் இரவு உணவிற்கு அழைத்துச் சென்றார்.

தனது தனிப்பட்ட வாழ்க்கையில் மிகவும் மதிக்கக்கூடிய ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி புதின் முக்கியத்துவம் அளிப்பதை இது காட்டுகிறது.

வேரா குரேவிச் ஜனாதிபதி புதினுக்கு ஜெர்மன் மொழி கற்பித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.