;
Athirady Tamil News

பருத்தித்துறையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

0

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பருத்தித்துறை நகரில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளது.

பருத்தித்துறை வர்த்தகர் சங்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்நினைவேந்தல் நிகழ்வானது பருத்தித்துறை நகர் பேருந்து நிலைய பகுதியில் இடம்பெற்றுள்ளது.

முள்ளிவாய்க்கால் போர்க்களத்தின் இறுதி நாட்கள் வரை அங்கிருந்து இனப்படுகொலையின் உயிர்வாழும் சாட்சியமாக வாழும் வர்த்தகர் க.யோகநாதன் பொதுச்சுடரினை ஏற்றியதை தொடர்ந்து அகவனக்கம் இடம்பெற்று மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.