;
Athirady Tamil News

யாழில்.வெள்ள அனர்த்த பிரதேசங்களை முன்கூட்டியே அடையாளம் கண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுங்கள்

0
யாழ்ப்பாணத்தில், மழைக்காலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்படும் பிரதேசங்களை அடையாளம் காண்பதுடன், பாதிப்புகளைக் குறைப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட மட்டத் திட்டமிடல் கூட்டம், கடற்றொழில், இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில்   யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
குடிநீர் வளத்தைப் பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பாகும்.
ஒவ்வொரு பிரதேசத்திலும் காணப்படும் குடிநீர்த் தேவைகள், நீர் விநியோகப் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்குத் தீர்வுகாணத் தேவையான நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களைப் பிரதேச ரீதியாகத் திரட்ட வேண்டியதன் அவசியம்
அதேபோன்று, வீடமைப்புத் திட்டங்களைத் தயாரிக்கும்போது வீட்டுத் தேவைகள், வீடற்ற குடும்பங்களின் நிலைமைகள் மற்றும் பயனாளிகளைத் தெரிவுசெய்வதற்கான நடைமுறைகள் தொடர்பான துல்லியமான தகவல்கள் அவசியம்
காணியற்ற மற்றும் வீடற்ற மக்களின் பிரச்சினைகளுக்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் காணியின்றியும் போதிய வசதிகளற்ற தற்காலிகக் குடியிருப்புகளிலும் வாழும் மக்களின் நிலைமைகளை ஆராய்ந்து, அவர்களுக்குப் பொருத்தமான தீர்வுகளை வழங்குவதற்கான திட்டங்களைத் தயாரிக்க வேண்டும்
மேலும், மழைக்காலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்படும் பிரதேசங்களை அடையாளம் காண்பதுடன், பாதிப்புகளைக் குறைப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் நீண்டகாலத் தீர்வுகள் தொடர்பான முன்மொழிவுகளையும் தயாரிக்க வேண்டும்
இதற்காகப் பிரதேச செயலாளர்கள் தத்தமது பிரதேசங்களின் நிலைமைகளை ஆராய்ந்து விரிவான முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்தார்
You might also like

Leave A Reply

Your email address will not be published.