;
Athirady Tamil News

டெங்கு பரவல் அதிகரிக்கலாம்: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை

0

நாட்டில் தற்போது நிலவிவரும் மழையுடனான வானி​லை காரணமாக, டெங்கு நுளம்புகளின் பரவல் அதிகரிக்கும் அபாயம் காணப்படுகிறது என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் நுளம்புகள் உற்பத்தியாகக் கூடிய இடங்களை உடனடியாக அகற்றுமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

முறையான டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் மீண்டும் டெங்கு அதி தீவிரப் பெருந்தொற்று நிலைமை உருவாகும் அபாயம் உள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்களின் ஒத்துழைப்பு
தற்போது அனைத்து மாவட்டங்களிலும் டெங்கு நுளம்பு ஒழிப்புக்கான பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்குப் பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியமானது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

வீடுகள் மற்றும் வளாகங்களில் நீர் தேங்கி நிற்கும் இடங்களைப் பரிசோதித்து அவற்றை அகற்றுவதற்கோ அல்லது நீர் தேங்குவதைத் தடுப்பதற்கோ நடவடிக்கை எடுப்பது மிக அவசியமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.