;
Athirady Tamil News

ஈரான் போரில் 42 விமானங்களை இழந்த அமெரிக்கா

0

ஈரான் மீது “ஆபரேஷன் எபிக் பியூரி” என்ற பெயரில் அமெரிக்கா நடத்திய 6 வார போர் நடவடிக்கையில், அமெரிக்கா 42 விமானங்களை இழந்ததாக அந்நாட்டு பாராளுமன்ற ஆராய்ச்சி சேவை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போரின் போது அமெரிக்காவின் போர் விமானங்கள் மற்றும் டிரோன்களை ஈரான் ராணுவம் சுட்டு வீழ்த்தியதாக கூறப்படுகிறது. அமெரிக்க பாதுகாப்புத்துறை மற்றும் அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு வெளியிட்ட தகவல்களை ஆய்வு செய்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி, அமெரிக்கா இழந்த அல்லது சேதமடைந்த விமானங்களில் 4 எப்-15இ ஸ்ட்ரைக் ஈகிள் போர் விமானங்கள், ஒரு எப்-35ஏ லைட்னிங்-2 போர் விமானம், ஒரு ஏ-10 தண்டர்போல்ட் தாக்குதல் விமானம் ஆகியவை அடங்கும்.மேலும், 7 கே.சி-135 ஸ்ட்ராடோடேங்கர் எரிபொருள் நிரப்பும் விமானங்கள், ஒரு இ-3 சென்ட்ரி கண்காணிப்பு விமானம், 2 எம்.சி-130ஜெ கமாண்டோ சிறப்பு நடவடிக்கை விமானங்கள், ஒரு எச்.எச்-60டபிள்யூ ஜாலி கிரீன் ஹெலிகாப்டர் ஆகியவையும் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, 24 எம்.க்யூ-9 ரீப்பர் டிரோன்கள் மற்றும் ஒரு எம்.க்யூ-4சி டிரைட்டன் டிரோனும் இழக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.