;
Athirady Tamil News

தீவிரவாத ஆதரவு பட்டியலிலிருந்து சிரியாவை நீக்க அமெரிக்கா தீர்மானம்

0

சிரியாவை “தீவிரவாதத்துக்கு ஆதரவளிக்கும் நாடு” என்ற பட்டியலிலிருந்து நீக்குவதற்கு டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

இந்தத் தீர்மானம் குறித்த தகவலை, ட்ரம்ப் நிர்வாகத்தின் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவைக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பான தனது முடிவை அமெரிக்க நிர்வாகம், அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் 45 நாட்களுக்குள் இந்த முடிவை மறுஆய்வு செய்து, நிர்வாகத்தின் ஆலோசனையின் அடிப்படையில் இறுதி முடிவை எடுப்பார்கள் என்று அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.