;
Athirady Tamil News

மன அழுத்தத்தில் இளைஞர்கள்.. மெலோடி சாப்பிடும் மோடி: ராகுல் காந்தி கடும் தாக்கு

0

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: “நாட்டில் விவசாயிகள், தொழிலாளர்கள், வணிகர்கள் உள்ளிட்டோர் பொருளாதார சுமையால் துயரத்தில் உள்ளனர். ஆனால் பிரதமர் மோடி சிரித்தபடி ‘ரீல்ஸ்’ உருவாக்கி வருகிறார். பா.ஜ.க.வினர் அதற்கு கைதட்டுகின்றனர். நாட்டின் மீது பொருளாதார புயல் வீசிக்கொண்டிருக்கிறது. ஆனால் நமது பிரதமர் இத்தாலியில் மெலடி மிட்டாய் சாப்பிடுவதில் பிஸியாக இருக்கிறார்” என்றார்.

முன்னதாக, இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடியுடன் காணொளி ஒன்றை பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவில், மோடி ‘மெலடி’ மிட்டாய் பாக்கெட்டை காட்டியபடி “மெலடி” என்று கூறுகிறார்., “பிரதமர் மோடி எங்களுக்கு ஒரு அருமையான மிட்டாய் பரிசாக கொண்டு வந்துள்ளார்” என்று மெலோனி கூறியதுடன், “பரிசுக்கு நன்றி” என்றும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.