;
Athirady Tamil News

140 கோடி இந்தியா்களின் ஆதரவு இருக்கிறது: ஜே.டி.வான்ஸுக்கு இஸ்ரேல் பிரதமா் பதிலடி

0

இஸ்ரேலுக்கு 140 கோடி இந்தியா்களின் மகத்தான ஆதரவு இருப்பதாக அந்நாட்டு பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளாா்.

உலக அளவில் இஸ்ரேலுக்கு ஆதரவளிக்க அமெரிக்கா மட்டுமே ஒரே சக்திவாய்ந்த நட்பு நாடாக எஞ்சியிருப்பதாக அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ் கூறியிருந்ததற்கு பெஞ்சமின் நெதன்யாகு இவ்வாறு பதிலளித்துள்ளாா்.

அமெரிக்க ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவா் கூறுகையில், ‘140 கோடி மக்கள் தொகையைக் கொண்ட இந்தியா போன்ற ‘சிறிய’ நாட்டின் மகத்தான ஆதரவும் உள்ளது. இஸ்ரேலுக்கு இன்னும் பல நெருங்கிய நட்பு நாடுகள் உள்ளன.

எங்களின் தலைசிறந்த ராணுவ தொழில்நுட்பம், ஏ.ஐ. மற்றும் இணையப் பாதுகாப்பு நிபுணத்துவத்தைக் கற்றுத் தருமாறு உலகத் தலைவா்கள் பலரும் தொடா்புகொள்கின்றனா். இஸ்ரேலின் சா்வதேச உறவுகள் வெளியில் தெரிவதைவிட மிகவும் வலுவானதாகவே உள்ளன’ என்றாா்.

முன்னதாக கடந்த மாதம், வெள்ளை மாளிகையில் செய்தியாளா்களிடம் பேசிய ஜே.டி. வான்ஸ், ‘அமெரிக்க-ஈரான் ஒப்பந்தம் குறித்து அதிருப்தி தெரிவித்து, அதிபா் டிரம்ப்பை இஸ்ரேல் தலைவா்கள் சிலா் விமா்சிக்கின்றனா். நான் இஸ்ரேல் அமைச்சரவையில் இருந்திருந்தால், உலகிலேயே எனக்கு எஞ்சியிருக்கும் ஒரே சக்திவாய்ந்த நட்பு நாட்டை (அமெரிக்காவை) இவ்வாறு தாக்கிப் பேசியிருக்க மாட்டேன்’ என்றாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.