;
Athirady Tamil News

6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை

0

நாட்டின் பல பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக 6 மாவட்டங்களில் உள்ள 16 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நிலச்சரிவு எச்சரிக்கைகளைத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இந்த அவசர அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் பதிவான மழையின் அளவை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நிலை ஒன்று எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளில் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழையும், நிலை இரண்டு பகுதிகளில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழையும் பதிவாகியுள்ளது.

அதேநேரம், நிலை மூன்று சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளில் 150 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதால் அங்கு அபாயம் மிகத் தீவிரமாக உள்ளது.

இதனால், நிலத்தில் வெடிப்புகள் ஏற்படுதல், மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்வடைதல், திடீரென நீரூற்றுகள் தோன்றுதல் போன்ற மண்சரிவு அறிகுறிகள் தென்படுமாயின், உடனடியாக அப்பகுதிகளில் இருந்து வெளியேறி, துறைசார் அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறு பொதுமக்கள் அவசரமாகக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.