சீனாவில் சுரங்க விபத்து: 4 பேர் உயிரிழப்பு: 90 தொழிலாளர்கள் சிக்கித் தவிப்பு
சீனாவில் ஏற்பட்டுள்ள சுரங்க விபத்தில் குறைந்தது 4 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
சுரங்க விபத்து
சீனாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்டுள்ள விபத்தில் குறைந்தது 4 பேர் கொல்லப்பட்டு இருப்பதுடன் 90 பேர் வரை சிக்கியுள்ளனர்.
அத்துடன் லியுஷென்யு(Liushenyu) நிலக்கரி சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களில் 16 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக நம்பப்படுகிறது.
Xinhua செய்தி நிறுவனத்தின் தகவல் படி, வெள்ளிக்கிழமை இரவு இந்த விபத்தானது நடந்துள்ளது.
இந்த விபத்தின் போது கிட்டத்தட்ட 247 தொழிலாளர்கள் சுரங்கத்தில் பணிபுரிந்து வந்ததாக தகவல் கூறப்படுகிறது.
இந்நிலையில் சுரங்கத்தில் சிக்கி கொண்டுள்ள டஜன் கணக்கான தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
அறிக்கைகளில், சாங்ஜி(Changzhi) நகரில் அமைந்துள்ள இந்த இடத்தில் கார்பன் மோனாக்சைடு அளவுகள் பாதுகாப்பு அளவை விட அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.