அளுத்கம கடற்கரையில் துண்டிக்கப்பட்ட மனித தலை; பொலிஸார் அதிர்ச்சி
அளுத்கம, மொரகல்ல கடற்கரையில் உள்ள முன்னணி சுற்றுலா விடுதி ஒன்றின் பின்புறக் கடற்கரையில் ஒதுங்கிய நிலையில், உடலிலிருந்து துண்டிக்கப்பட்ட மனித தலை ஒன்று இன்று (23) காலை மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அளுத்கம பொலிஸாருக்கு கிடைத்த தொலைபேசி அழைப்புக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே இந்த மனித தலை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது ஒரு ஆணின் தலை என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரது அடையாளம் குறித்த எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக அளுத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.