யாழ்.மாநகர சபை சைவ சமய விவகாரக்குழுவின் 2026 ஆம் ஆண்டுக்கான நல்லைக் குமரன் 34 ஆவது மலர் வெளியீட்டிற்கான ஆக்கங்கள் கோரப்பட்டுள்ளன.
ஆக்கங்களை அனுப்பும் போது,
ஆக்கங்கள் தமிழ் மொழியில் அமைவதுடன். கட்டுரைகள் 5 தொடக்கம் 7 பக்கங்களுக்குள் அமைதல் வேண்டும். ஏற்கனவே நல்லைக் குமரன் மலரில் வெளிவந்த அல்லது வேறு நூல்களில் வெளிவந்த ஆக்கங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.
ஆக்கங்களை எதிர்வரும் 25.06.2026 ஆம் திகதிக்கு முன்பதாக அனுப்பி வைக்க வேண்டும். பிந்திக்கிடைக்கும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
ஆக்கங்களை [email protected] எனும் மின்னஞ்சல் மூலம்/இறுவெட்டுக்கள் மூலம் அனுப்புவது அவசியம். மென் பிரதியாக அனுப்பப்படாத ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
அத்துடன் தங்களது முகவரி மற்றும் தொலைபேசி இலக்கங்கள் குறிப்பிடப்படல் வேண்டும் என யாழ். மாநகர சபை ஆணையாளர் அறிவித்துள்ளார்.