;
Athirady Tamil News

யாழில் பரிதாபமாக உயிரிழந்த பெண் குழந்தை

0

யாழில் இரண்டு மாதங்கள் நிரம்பிய பெண் குழந்தை நேற்று(27.05.2026) அதிகாலை உயிரிழந்துள்ளது.

கச்சேரியடி, நல்லூர் வீதி , யாழ்ப்பாணம் என்ற முகவரியைச் சேர்ந்த விதுசன் சாயிஷா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

மரணத்திற்கான காரணம்
இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குழந்தைக்கு தாயார் பாலூட்டியுள்ளார்.

பின்னர் நேற்று அதிகாலை குழந்தை அசைவற்று காணப்பட்டுள்ளது. இந்நிலையில் குழந்தையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இருப்பினும் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

மரணத்திற்கான காரணம் தெரியவராத காரணத்தால் மேலதிக பரிசோதனைகளுக்காக குழந்தையின் உடற்கூற்று மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.