;
Athirady Tamil News

யாழ். போதனா வைத்தியசாலைக்கு 16 மில்லியன் ரூபா பெறுமதியான எக்கோ இயந்திரம் அன்பளிப்பு!

0
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இருதய சிகிச்சை பிரிவுக்கு புதிய எக்கோ இயந்திரம் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
அவுஸ்ரேலியாவிலுள்ள எமரல் காடியாக் என்ற நிறுவனத்தினால் நன்கொடையாக 16 மில்லியன் ரூபா பெறுமதியான குறித்த இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு வருகை தரும் ஆயிரக்கணக்கான இதய நோய் சார்ந்தவர்களுக்கான சிகிச்சையினை வழங்க முடியும் எனவும், குறித்த இயந்திரமானது இருதய சிகிச்சை பிரிவிற்கு மிகவும் அவசியமானதாக காணப்படுவதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
அத்துடன் இருதயத்தின் செயற்பாடுகள் பற்றி மிக துல்லியமாக அறிந்து கொள்வதற்கு இந்த இயந்திரம் பயன்படும் என குறிப்பிட்ட பணிப்பாளர் குறித்த இயந்திரத்தினை வழங்கிய நிறுவனத்திற்கும் அதனைப் பெற்றுக் கொடுத்த அன்பாலயம் அமைப்பிற்கும் தனது நன்றியினை தெரிவித்தார்.
அத்தோடு இன் இயந்திரத்தின் ஊடாக ஒரு நாளைக்கு 60 க்கு மேற்பட்டோர் பயன்பெறுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
You might also like

Leave A Reply

Your email address will not be published.