;
Athirady Tamil News

மூளைக்காய்ச்சல் பரவல் ; தன்சாலைகளுக்கு பதிவு முக்கியம்

0

நாட்டில் பரவி வரும் மூளைக்காய்ச்சல் நிலைமையைக் கருத்தில் கொண்டு வெசாக் மற்றும் பொசன் பண்டிகைகளை முன்னிட்டு தானசாலைகளை ஏற்பாடு செய்பவர்கள், தத்தமது பிரதேசத்திற்குரிய சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகங்களில் தங்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும் என தொற்றுநோயியல் பிரிவின் விசேட சமூக மருத்துவ நிபுணர் திலங்க ருவன்பத்திரன கோரிக்கை விடுத்துள்ளார்.

பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தானசாலைகளை பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான முறையில் நடத்துவதற்கான அடிப்படைக் வழிகாட்டல்களை வழங்குவார்கள் என்றும், இந்த வழிகாட்டல்களைத் தேடிப் பின்பற்றுவது ஏற்பாட்டாளர்களின் பொறுப்பாகும் என்றும் அவர் மேலும் கூறினார்.

“தற்போது நாட்டில் பரவி வரும் மூளைக்காய்ச்சல் நிலைமையைக் கருத்தில் கொண்டு, இம்முறை தானசாலைகளில் வழமையை விடவும் அதிகளவில் சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு குறித்துக் கவனம் செலுத்தப்பட வேண்டும்” என மருத்துவர் திலங்க ருவன்பத்திரன சுட்டிக்காட்டினார்.

தானசாலைகளுக்கு உத்தியோகபூர்வத் தடை எதுவும் விதிக்கப்படாத போதிலும், இந்த ஆண்டு குளிர் பானங்கள் விநியோகிப்பதைக் குறைத்துக் கொள்ளுமாறு சுகாதார அதிகாரிகள் ஏற்பாட்டாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். அதற்குப் பதிலாக தேநீர், கோப்பி போன்ற மூலிகை பானங்களை வழங்குமாறு ஊக்கப்படுத்தப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.