;
Athirady Tamil News

யாழில் அதிபர் உயிரிழப்புக்கு காரணமான படகோட்டிக்கு விளக்கமறியல்

0

யாழ்ப்பாணம் நயினாதீவு கடலில் தவறி விழுந்து பாடசாலை அதிபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், கைதான படகோட்டியை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

நயினாதீவில் இருந்து குறிகாட்டுவான் நோக்கி, நேற்று (28) மாலை படகில் பயணித்துக்கொண்டிருந்த வேளை கடற்சீற்றம் காரணமாக படகில் இருந்து கடலினுள் தவறி விழுந்து 48 வயதுடைய பாடசாலை அதிபர் ஒருவர் உயிரிழந்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஊர்காவற்துறை பொலிஸார் படகோட்டியை கைது செய்து, விசாரணைகளை முன்னெடுத்த பின்னர், ஊர்காவற்துறை நீதாவன் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் முற்படுத்திய போது, படகோட்டியை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.