மொனராகலை – சியம்பலாண்டுவ வீதியில் பேருந்து விபத்து; 26 பேர் காயம்
மொனராகலை – சியம்பலாண்டுவ பிரதான வீதியில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
மொனராகலையில் இருந்து கொட்டியாகலை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபை பஸ் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 26 பேர் காயமடைந்துள்ளனர்.காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விபத்திற்கான காரணம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.