;
Athirady Tamil News

கோப்பாய் சரவணபவானந்தா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா

0

யாழ்ப்பாணம், கோப்பாய் சரவணபவானந்தா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா வெள்ளிக்கிழமை   பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.

நூற்றாண்டு விழாவின் பிரதான நிகழ்வாக கலைநயத்துடன் உருவாக்கப்பட்ட பாடசாலை பிரதான நுழைவாயில் திறந்துவைக்கப்பட்டதுடன் நினைவுக்கல்லும் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.

பாடசாலை அதிபர் அமிர்தலிங்கம் கஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் யாழ். இந்திய துணைத் தூதர் சாய் முரளி, யாழ் மாவட்ட செயலர், மருதலிங்கம் பிரதீபன், யாழ்ப்பாணம் வலயக் கல்வி பணிப்பாளர் மாலதி முகுந்தன், தென்மராட்சி பிரதேச செயலக சிறுவர் மேம்பாட்டு உரிமை உத்தியோகத்தர் முருகவேள் சுரேஷ்வரன், பழைய மாணவர் நடேசபிள்ளை சுந்தரேஸ்வரன் ஆகியோர் விருந்தினராக கலந்துகொண்டதுடன் ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள், பொதுமக்கள் என பலரும் பங்கேற்றனர்.

நிகழ்வில் நூற்றாண்டு விழா மலர் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் கல்வியில் சாதித்த மாணவர்களுக்கு பரிசுகளும் கௌரவிப்புகளும் வழங்கப்பட்டதுடன் சிறந்த அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் குரு பிரதீபா பிரபா விருது பெற்ற பாடசாலை அதிபரும் விருந்தினர்களால் கௌரவிக்கப்பட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.