தமிழர் பகுதியொன்றில் விபத்தில் சிக்கிய கார் ; சிறுவன் உள்ளிட்ட நால்வர் படுகாயம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் நேற்று (29) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவன் ஒருவர் உட்பட நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் பயணித்த கார், வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மதில் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக அப்பகுதி மக்களால் மீட்கப்பட்டு கல்லாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து களுவாஞ்சிகுடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.