;
Athirady Tamil News

கடலுக்குள் இழுத்து செல்லப்பட்ட மூன்று சிறுவர்கள்: தேடுதல் பணி தீவிரம்

0

கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்ட 3 சிறுவர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படாதது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கடலுக்குள் இழுத்து செல்லப்பட்ட சிறுவர்கள்
அம்பாந்தோட்டைப் பிரதேசத்தில் கடல் அலையினால் இழுத்துச் செல்லப்பட்ட மூன்று சிறுவர்கள் காணாமல் போயுள்ளனர்.

அம்பாந்தோட்டை, ஹுங்கம – கலமெட்டிய பிரதேசத்தில் நேற்று(30) இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடலில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போன பிள்ளைகள் 12 முதல் 18 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன பிள்ளைகளை கண்டுபிடிக்கும் நோக்கிலான தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.