;
Athirady Tamil News

யாழ். மாவட்டச் செயலகத்தில் வெசாக் பௌர்ணமி தின நிகழ்வு!

0
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் வெசாக் தின நிகழ்வு மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் சனிக்கிழமை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் நாகவிகாரை விகாராதிபதி மீஹாஹ ஜந்துறே ஸ்ரீவிமல தேரோ கலந்துகொண்டு வெசாக் தினம் தொடர்பாக ஆசியுரை வழங்கினார்.

இந் நிகழ்வில் வட மாகாண கடற்படைத் தளபதி, வடமாகாண விமானப்படைத் தளபதி, யாழ் மாவட்ட  51 வது படைப்பிரிவின் இராணுவ  கட்டளைத் தளபதி, 512 ஆவது படைப்பிரிவின் இராணுவ  தளபதி, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு ஆசீர்வாதங்களை பெற்றுக் கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.