யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை விஜயம் செய்துள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா அச்சுவேலியில் உள்ள கைத்தொழில் பேட்டைக்கு சென்றிருந்தார்.
அதன் போது, கைதொழில் பேட்டையின் தொழில்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.
குறித்த விஜயத்தின் போது, இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜாவுடன் , யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் சாய் முரளி,தூதரக அதிகாரிகளும் உடனிருந்தனர்.