பொன் சிவகுமாரனின் 52 ஆவது நினைவேந்தலுக்குவலி. கிழக்கு பிரதேச சபை உத்தியோகபூர்வமாக அழைப்பு
உரும்பிராய் சந்தியில் உள்ள சிவகுமாரனின் நினைவிடத்திலேயே ஈகைச்சுடரேற்றி அனுஸ்டிக்கப்படவுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை ஏற்கனவே வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தமிழ் மக்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட இன ஒடுக்குமுறைக்கு எதிராக தன்னை முழுமையாக அர்ப்பணித்து போராடிய நிலையில் 1974 ஆண்டு யூலை 5 ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்ட சமயத்தில் நஞ்சருந்தி தன்னுயிரை பொன் சிவகுமாரன் ஆகுதியாக்கினார்.
தமிழ் மாணவர்களுக்கு பல்கலைக்கழக அனுமதிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தரப்படுத்தலுக்கு எதிராக தமிழ் மாணவர் பேரவையில் தன்னை முழுமையாக இணைத்துப் போராடிய பொன் சிவகுமாரன் அவர்கள் உலகத்தமிழாராட்சி மாநாட்டு படுகொலை உள்ளிட்ட தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவீழ்த்து விடப்பட்ட ஆயுதவழியிலான வன்முறைகளையும் அடக்கு முறைகளையும் எதிர்த்து இளைஞனாக தன்னுயிரை இனத்திற்காக தியாகம் செய்தார்.
இவ் நினைவேந்தலில் பங்கேற்பதற்காக சகலரும் அழைக்கப்படுகின்றனர்.
