;
Athirady Tamil News

செம்மணியில் குவியலாக சிறுவர்களின் என்பு கூடுகள்

0

செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வு பணிகளின் போது சிறுவர்களுடைய என்பு கூடுகள் உள்ளிட்ட 06 மனித என்பு கூட்டு தொகுதிகள் குவியலாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்டத்தின் 19ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது. அதன் போது, சிறுவர்களுடைய என்பு கூட்டு தொகுதிகள் உள்ளடங்கலாக 06 மனித என்புகூட்டு தொகுதிகள் குவியலாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அவற்றினை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அதேவேளை இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது 06 மனித என்பு கூடுகள் உள்ளடங்கலான மனித என்பு கூட்டு தொகுதிகள் உட்பட 16 மனித என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்பு கூட்டு தொகுதிகளில் 4 என்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில் செம்மணி மனித புதைகுழியில் இதுவரையிலான கால பகுதியில் நடைபெற்ற அகழ்வு பணிகளின் போது 318 மனித என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் , 302 என்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.