;
Athirady Tamil News

அமெரிக்காவுக்கு எதிரான போரில் ஈரானுக்கு உதவும் ரஷியா: உக்ரைன் அதிபர் குற்றச்சாட்டு

0

வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க கட்டமைப்புகள் தொடர்பான தகவல்களை ஈரானுக்கு ரஷியா வழங்குவதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.

ஈரான் – அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே கடந்த பிப். 28 ஆம் தேதி தொடங்கிய போர் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஜூன் 17 ஆம் தேதி ஸ்விட்சர்லாந்தில் இடைக்கால அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதைத் தொடர்ந்து ஹோர்முஸ் நீரிணை அருகே மூன்று வணிகக் கப்பல்களின் மீது ஈரானிய படைகள் திடீர் தாக்குதல் நடத்தியதாகக் குற்றஞ்சாட்டிய அமெரிக்கா செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) 80-க்கும் அதிகமான ஈரானின் கட்டமைப்புகள் மீது தாக்குதல்களை நடத்தியது.

ஆகையால், கையெழுத்திடப்பட்ட அமைதி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்ட நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன.

இதுகுறித்து ஜெலென்ஸ்கி கூறுகையில், ”ஜூலை மாதத் தொடக்கத்திலிருந்து, வளைகுடா நாடுகள் மற்றும் அங்கு அமைந்துள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ரஷியா செயற்கைக்கோள் மூலம் தீவிரமாகக் கண்காணிப்பதை நாங்கள் (உக்ரைன்) பதிவு செய்துள்ளோம். இந்தப் படங்கள் பின்னர் ஈரானில் வெளிவருகின்றன. எனவே, அமெரிக்காவுக்கு எதிரான இந்தப் போரில் ஈரானுக்கு ரஷியா உதவி வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.