புங்குடுதீவு இறுப்பிட்டி கிராமத்தில் சிறப்பாக மேற்கொள்ளப்பட்ட பொதுநலன் செயற்பாடு
புங்குடுதீவு இறுப்பிட்டி கிராமத்தில் சிறப்பாக மேற்கொள்ளப்பட்ட பொதுநலன் செயற்பாடு
சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ( சூழகம்) செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின் ஒழுங்கமைப்பில் புங்குடுதீவு இறுப்பிட்டி அபிவிருத்தி சங்கம் ( கனடா ) வழங்கிய ரூபாய் 260,000 நிதியுதவியில் புங்குடுதீவு இறுப்பிட்டி மற்றும் கழுதைப்பிட்டி கிராமங்களில் இருபது ( 50 w) புதிய வீதி மின்விளக்குகள் பொருத்தப்பட்டதோடு ஏற்கனவே பழுதடைந்து காணப்பட்ட மின்விளக்குகளும் திருத்தியமைக்கப்பட்டுள்ளன.
கிராம மக்களின் நீண்டகால வேண்டுகோளின் பேரிலும், வீதி விபத்துகளைத் தடுப்பதற்காகவும், சுற்றுலா மேம்பாட்டிற்கும், ஊரின் பாதுகாப்புத் தேவையையும் கருத்தில் கொண்டும், கதெரு மின்விளக்குகளை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வேலணை மின்சார சபை அலுவலகத்தின் அனுமதியுடன் பின்வரும் பகுதிகளில் புதிய வீதி மின்விளக்குகள் பொருத்தப்பட்டதுடன், இருபது மின்விளக்குகள் திருத்தப் பணிகளும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளன.
பணிகள் மேற்கொள்ளப்பட்ட பகுதிகள்:
பிரதான வீதி – ஸ்ரீ சித்தி விநாயகர் பாடசாலை முதல் கழுதைப்பிட்டி சந்தி வரை.
பெரியபுலம் பிள்ளையார் ஆலயம் முதல் பிரதான வீதி வரை.
புங்குடுதீவு ஆறாம் வட்டாரம் கழுதைப்பிட்டி இறங்கு துறைமுகம் முதல் பிள்ளையார் வளைவு சந்தி வரை.
அரியநாயகன்புலம் பிள்ளையார் கோவில் வீதி – புதிய மின்விளக்கு பொருத்துதல் மற்றும் மின்குமிழ் மாற்றுதல்.
அரியநாயகன்புலம் பாடசாலை வடக்கு வீதி – திருத்தப் பணிகள் மற்றும் மின்குமிழ் மாற்றுதல்.
பொருத்தப்பட்டுள்ள புதிய மின்குமிழ்களுக்கு அதிக பாதுகாப்பினையும் நீண்டகால பயனையும் வழங்கக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
இப்பணிகளை சிறப்பாக நிறைவேற்ற உதவிய சூழகம் அமைப்பின் செயலாளர்
திரு. கருணாகரன் நாவலன், சூழகம் அமைப்பின் உபதலைவர் க.குணாளன்
, இறுப்பிட்டி அரியநாயகன்புலம் ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலயத்தின் நித்திய பூசகர் கருணா ஐயர்
மற்றும் தெரு மின்விளக்குகள் பொருத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய வேலணை பிரதேச சபை அதிகாரிகளுக்கும் இறுப்பிட்டி அபிவிருத்தி சங்கத்தினர் (கனடா ) நன்றி தெரிவித்துள்ளனர்.

.