;
Athirady Tamil News

ஆர்மீனியா பொதுத்தேர்தல்: ஆட்சியை தக்கவைத்தார் பிரதமர் நிக்கோல் பாஷின்யான்

0

யெரெவான்,

ஆர்மீனியா நாட்டில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு ஜூன் 7-ந்தேதி(நேற்று) நடைபெற்றது. தொடர்ந்து இன்றைய தினம் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் ஆர்மீனிய பிரதமர் நிக்கோல் பாஷின்யான் தலைமையிலான ஆளும் ‘சிவில் கான்ட்ராகட்’ கட்சி 49.81 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது.

இந்த பொதுத்தேர்தலில் நிக்கோல் பாஷின்யானை எதிர்த்து போட்டியிட்ட ‘ஸ்ட்ராங் ஆர்மீனியா’ கட்சியின் தலைவரும், கோடீஸ்வரருமான சாமுவேல் கரபெட்யான் 23.29 சதவீத வாக்குகள் பெற்று தோல்வியை தழுவியுள்ளார்.

‘சிவில் கான்ட்ராகட்’ கட்சி ஆர்மீனியாவை ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. அதே சமயம் ‘ஸ்ட்ராங் ஆர்மீனியா’ கட்சி ரஷியாவுடன் வர்த்தக உறவுகளை வளர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.

தேர்தல் வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நிக்கோல் பாஷின்யான், தங்கள் கட்சி மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாகவும், தனித்து ஆட்சி அமைப்போம் என்றும் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.