;
Athirady Tamil News

பிரதமர் நரேந்திர மோடியின் செல்ஃபி வீடியோ 30 கோடி பார்வையாளர்களைக் கடந்து சாதனை

0

புதுடெல்லி: பிரதமர் நரேந்​திர மோடி இன்​ஸ்​டாகி​ராமில் வெளியிட்ட செல்ஃபி வீடியோ 30 கோடிக்​கும் அதி​க​மான பார்வையாளர்​களைக் கடந்து சாதனை படைத்து உள்​ளது.

நீட் வினாத்​தாள் கசிவு விவ​காரம் தொடர்​பாக டெல்லி ஜந்​தர் மந்தரில் மாணவ, மாணவி​கள், இளைஞர்​கள் தொடர் போராட்​டம் நடத்தி வந்தனர். இதுதொடர்​பாக கடந்த 23-ம் தேதி நள்​ளிர​வில் பிரதமர் நரேந்​திர மோடி இன்​ஸ்​டாகி​ராமில் ஒரு செல்ஃபி வீடியோவை வெளி​யிட்​டார்.

அதில், வினாத்​தாள் கசிவு வழக்​கு​களை விசா​ரிக்க விரைவு நீதி​மன்​றங்​கள் அமைக்​கப்​படும். இந்த பிரச்​சினைக்கு தீர்வு காண நாடாளு​மன்​றத்​தில் புதிய மசோதா விரை​வில் நிறைவேற்றப்படும்” என்று உறுதி அளித்​தார்.

பிரதமர் நரேந்​திர மோடி​யின் வீடியோவை தொடர்ந்​து, டெல்லி ஜந்தர் மந்​தர் போராட்​டத்தை முன்​னின்று நடத்திய கரப்​பான்​பூச்சி ஜனதா கட்சி நிர்​வாகி​கள் நேற்று முன்​தினம் மத்​திய அமைச்​சர்​கள் ஜே.பி. நட்​டா, ஜிதேந்​திர சிங்கை சந்​தித்​துப் பேசினர்.

மேலும் பிரதமர் நரேந்​திர மோடி​யின் இன்​ஸ்​டாகி​ராம் செல்ஃபி வீடியோவுக்கு பதில் அளிக்​கும் வகை​யில் ஏராள​மானோர் தங்​கள் கருத்​துகளை பதி​விட்​டனர். இதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்​திர மோடி வெள்​ளிக்​கிழமை நள்​ளிர​வில் இன்​ஸ்​டாகி​ராமில் மற்​றொரு செல்ஃபி வீடியோவை வெளி​யிட்​டார்.

அதில்,“நண்​பர்களுக்கு நன்​றி. கடந்த 23-ம் தேதி இரவு உங்​களோடு பேசினேன். எனது வீடியோவுக்​குப் பதில் அளித்து நீங்​கள் ஆக்​கப்​பூர்​வ​மான கருத்​துகளைப் பதி​விட்டு உள்​ளீர்​கள். உங்​கள் அனை​வருக்​கும் நன்​றியைத் தெரி​வித்​துக் கொள்​கிறேன். உங்​கள் அன்பும் ஆதர​வும் பிணைப்​பும் மேலும் வலு​வடை​யும்” என்று தெரி​வித்​துள்​ளார்.

பிரதமர் நரேந்​திர மோடி இன்​ஸ்​டாகி​ராமில் வெளி​யிட்ட புதிய செல்ஃபி வீடியோ 24 மணி நேரத்​தில் 30.3 கோடி பார்​வை​யாளர்​களைக் கடந்து சாதனை படைத்து உள்​ளது. இந்த வீடியோ பல்​வேறு சமூக வலை​தளங்​களில்​ வைரலாக பரவி வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.