;
Athirady Tamil News

மாணவர் போராட்டம் மாபெரும் வெற்றி; மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா!

0

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் மாணவர்கள் மாபெரும் போராட்டம் நடத்தி வந்த நிலையில் இந்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்தியக் கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அமைப்பின் சார்பில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தப் போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்த நிலையில் போராட்டம் இன்னும் வலுவடைந்த நிலையில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.