கைதான தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் விளக்கமறியலில்
UPDATE: தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இன்று (10) மதியம் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா, பின்னர் புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
தென் மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா, ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நிதி மோசடி மற்றும் அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து நீண்டகாலமாக முன்னெடுக்கப்பட்டு வந்த விசாரணைகளை அடுத்தே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.