நாட்டில் மீன்களின் விலை திடீர் அதிகரிப்பு
நாட்டில் கடந்த வாரங்களுடன் ஒப்பிடுகையில் சந்தையில் இன்றைய தினம் (10) மீன்களின் விலைகள் மேலும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.
தற்போது நிலவும் காலநிலை மற்றும் மீன்பிடியில் ஏற்பட்டுள்ள சிக்கல்களே மீன் விலை அதிகரிப்பிற்குக் காரணம் என பேலியகொட மத்திய மீன் சந்தை வர்த்தகர்கள் சங்கத்தின் செயலாளர் ஜயந்த குரே தெரிவித்துள்ளார்.
இதற்கமைய , லின்னோ (சூரை) மீன் ஒரு கிலோகிராம் 1,300 ரூபாய் சாளை மீன் ஒரு கிலோகிராம் 800 முதல் 900 ரூபாய் வரை, தலபத் மீன் ஒரு கிலோகிராம் 2,500 ரூபாய் ஆகவும் விற்பனை செய்யப்படுகின்றது.