;
Athirady Tamil News

வடமராட்சி கிழக்கில் புற்தரைக்கு தீ வைத்த விஷமிகள் – போக்குவரத்து பாதிப்பு

0

யாழ்ப்பாணம் , வடமராட்சி கிழக்கு வலிக்கண்டி பகுதியில் வீதியோர சம்பு புற்களுக்கு விஷமிகள் தீ வைத்தமையால் , சில மணி நேர போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருந்தது.

பருத்தித்துறை – மருதங்கேணி பிரதான வீதியில் வலிக்கண்டி பகுதியில் வீதியோரமாக காணப்பட்ட சம்பு புற்களுக்கு விஷமிகள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை தீ வைத்துள்ளனர்.

கடும் காற்று வீசி வரும் நிலையில் , வீதியோர புற்கள் தவிர்ந்து அருகில் வெளிகளில் காணப்பட்ட புற்தரைகளுக்கு தீ பரவியதால் , பெருமளவான புகை மூட்டம் எழுந்து வீதியூடாக போக்குவரத்து செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டது.

பருத்தித்துறை பிரதேச சபையின் தண்ணீர் பவுசர் அழைக்கப்பட்டு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பின்னரே வீதியின் ஊடாக பொது மக்கள் போக்குவரத்து செய்ய கூடிய நிலைமை ஏற்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.