;
Athirady Tamil News

இந்திய எல்லையில் ஊடுருவிய பாகிஸ்தானியர் கைது

0

பூஞ்ச்,

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் மெந்தார் சப் டிவிஷனின் பாலகோட் செக்டார் பகுதியில் இந்திய ராணுவத்தினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, பாகிஸ்தான் பகுதியில் இருந்து ஒருவர் இந்திய பகுதிக்குள் ஊடுருவி வந்துள்ளார். அவரை பிடித்த இந்திய ராணுவத்தினர் விசாரணை நடத்தினர். அதில் பாகிஸ்தானின் பக்தூன் பகுதியை சேர்ந்த பாஜியா ஜடா கான் என்பவரின் மகன் ரயீஸ் கான் என்பது தெரியவந்துள்ளது.

எதற்காக எல்லை தாண்டினார், யாரை பார்க்க இந்திய எல்லைக்கு வந்துள்ளார், பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்து இந்திய ராணுவத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.