;
Athirady Tamil News

கரப்பான் பூச்சி தோசை; சைவ உணவகத்திற்குச் சென்ற நபருக்கு அதிர்ச்சி

0

ஹட்டன் நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் உணவுடன் சேர்த்து கரப்பான் பூச்சி வழங்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, அப்பகுதியில் உள்ள ஹோட்டல்களின் சுகாதாரமற்ற நிலை குறித்து பொதுமக்கள் கடும் அதிருப்தியையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர்.

ஹட்டன் நகரில் உள்ள ஒரு சைவ உணவகத்திற்குச் சென்ற நபர் ஒருவருக்கு வழங்கப்பட்ட தோசைத் தட்டில் கரப்பான் பூச்சி ஒன்று இருந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

இது குறித்து அவர் உடனடியாக ஹோட்டல் உரிமையாளர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, ஹோட்டல் நிர்வாகத்தினர் அந்த உணவிற்கான கட்டணத்தைப் பெற்றுக்கொள்ளாமல், தங்களது தவறுக்காக வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், இது குறித்து கருத்து தெரிவித்த அப்பகுதி மக்கள் கூறுகையில், “ஹட்டன் நகரில் இயங்கும் சில ஹோட்டல்கள் மிகவும் சுகாதாரமற்ற முறையில் பராமரிக்கப்படுகின்றன. எனவே, பொதுமக்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.