;
Athirady Tamil News

இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் கமேனியின் இறுதி ஊர்வலம்

0

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனிக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக, தலைநகர் தெஹ்ரானிலுள்ள ஆசாதி வீதியில் இலட்சக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர்.

அலி கமேனியின் உடல் வைக்கப்பட்டுள்ள பேழை மற்றும் அவருடன் உயிரிழந்த அவரது மகள், மூன்று வயது பேத்தி, மருமகன் மற்றும் மருமகள் ஆகியோரின் உடல்கள் அடங்கிய பேழைகளைத் தாங்கிய வாகனம் ஒன்று, திரண்டிருந்த மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் மெதுவாக நகர்ந்து சென்றது.

கமேனியின் உடல் தஹ்ரானில் இறுதி ஊர்வலம் நடைபெறும் இறுதி எல்லையான ஆசாதி சதுக்கத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

தெஹ்ரானில் நடைபெறும் இறுதி ஊர்வலத்தைத் தொடர்ந்து, அவரது உடல் அடுத்த சில நாட்களில் அண்டை நாடான ஈராக்கிலுள்ள ஷியா முஸ்லிம்களின் புனிதத் தலங்களான கர்பலா மற்றும் நஜாப் ஆகிய நகரங்களுக்குக் கொண்டு செல்லப்படவுள்ளது.

அதனைத் தொடர்ந்தே, அலி கமேனியின் உடலானது ஈரானிலுள்ள அவரது சொந்த ஊரான மஷாத் நகருக்குக் கொண்டு வரப்பட்டு அங்கு அடக்கம் செய்யப்படவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.