;
Athirady Tamil News

சீனாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு: 8 பேர் பலி

0

பிஜீங்,

சீனாவின் ஹுபே மாகாணம் ஹுன்ஷி, ஹுன்ஹங், இஹொ, ஜினிங் ஆகிய நகரங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், வெள்ளநீர் நகரங்களை சூழ்ந்துள்ளது. கனமழை காரணமாக ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

8 பேர் பலி
இந்நிலையில், சீனாவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 275 பேர் படுகாயமடைந்துள்ளனர். அதேவேளை, அந்நாட்டின் கன்சு மாகாணத்தில் மலைப்பாங்கான பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 16 பேர் மாயமாகினர். அவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.