;
Athirady Tamil News

பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து ; தெய்வாதீனமாக தப்பிய உயிர்கள்

0

நுவரெலியா பேருந்து நிலையத்திற்கு அருகில், நுவரெலியா கிரெகரி ஏரியை ஒட்டியுள்ள தலகல ஓயாவிற்குள் தனியார் பேருந்து ஒன்று கவிழ்ந்து இன்று (08) விபத்துக்குள்ளாகியுள்ளது.

நுவரெலியாவிலிருந்து நுவரெலியா சாந்திபுர நோக்கி பயணிக்கும் இந்தத் தனியார் பேருந்தை நிறுத்துவதற்கு முற்பட்ட போது, அது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து தலகல ஓயாவிற்குள் கவிழ்ந்து இந்த விபத்து நேர்ந்துள்ளது.

பயணிகளை இறக்கிவிட்டு, பஸ்ஸை நிறுத்துமிடத்தை நோக்கி பின்னால் செலுத்திய போதே இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.

விபத்து நடந்த தருணத்தில் பேருந்திற்குள் சாரதியும் நடத்துநரும் மாத்திரமே இருந்துள்ளதுடன், அவர்களில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என நுவரெலியா பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.