;
Athirady Tamil News

நைஜீரியா: பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி குழந்தைகள் 44 பேர் மீட்பு

0

அபுஜா,

மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும், கொள்ளை கும்பல்களும் செயல்பட்டு வருகின்றன.

இதனிடையே, அந்நாட்டின் ஒயோ மாகாணம் ஒசிரி மாவட்டத்தில் உள்ள 3 பள்ளிகளுக்குள் கடந்த மே 15ம் தேதி புகுந்த பயங்கரவாதிகள் அங்கிருந்த பள்ளி குழந்தைகள், ஆசிரியர்கள் என மொத்தம் 44 பேரை கடத்தி சென்றனர். இதையடுத்து, கடத்தப்பட்ட பள்ளி குழந்தைகள், ஆசிரியர்களை தேடும் பணியில் பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டிருந்தனர்.

மீட்பு
இந்நிலையில், பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி குழந்தைகள், ஆசிரியர்கள் 44 பேரையும் பாதுகாப்புப்படையினர் நேற்று அதிரடியாக மீட்டுள்ளனர். மேலும், இந்த சமப்வம் தொடர்பாக சிலரை பாதுகாப்புப்படையினர் கைது செய்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.