;
Athirady Tamil News

ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதாக அறிவித்த ஈரான் ; எரிபொருள் விலை மீண்டும் உயரும் அபாயம்

0

உலக எண்ணெய் வர்த்தகத்தின் முக்கிய கடல் பாதையாக கருதப்படும் ஹார்முஸ் நீரிணையை மீண்டும் மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் முதல் மூன்று மாதங்களுக்கு ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக உலகளவில் எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டு, பல நாடுகளில் அவசரநிலை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், கியாஸ், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் பல நாடுகளில் வேகமாக அதிகரித்தன.

பின்னர் இடம்பெற்ற அமைதி பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதனை மீண்டும் மூடுவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதன் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மேலும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதுடன், அதன் தாக்கமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.