;
Athirady Tamil News

மெக்சிகோ: நெடுஞ்சாலையில் கோர விபத்து – 10 பேர் பலி

0

மெக்சிகோ சிட்டி,

வட அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு மெக்சிகோ. இந்நாட்டின் ஜலஸ்கோ மாகாணம் க்வாடலஜாரா நகருக்கும், டிபிக் நகருக்கும் இடையே தேசிய நெடுஞ்சாலை உள்ளது.

இந்த நெடுஞ்சாலையில் நேற்று ஏராளமான வாகனங்கள் சென்றுகொண்டிருந்தன. ஹொஸ்டோடிபாக்யூவா நகர் அருகே நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த சரக்கு லாரி எதிரே வந்த வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் கார்கள், சரக்கு லாரி என பல வாகனங்கள் தீப்பற்றி எரிந்தன. இந்த விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். மேலும், 10 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.