;
Athirady Tamil News

விசேட டெங்கு ஒழிப்புச் சிரமதானம்

0

சம்மாந்துறைசபூர் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், பாடசாலை வளாகத்தை மையப்படுத்தி விசேட டெங்கு ஒழிப்புச் சிரமதான நிகழ்வொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக நிலவும் காலநிலை மாற்றம் மற்றும் டெங்கு பரவல் அச்சுறுத்தலைக் கருத்திற் கொண்டு, சமூகப் பொறுப்புணர்வுடன் இந்தச் சிரமதான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது பாடசாலையின் உட்புற மற்றும் வெளிப்புறச் சூழல்கள், நுளம்புகள் பெருக்கமடையாத வகையில் முழுமையாகத் தூய்மைப்படுத்தப்பட்டுத் துப்புரவுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இவ் விசேட சமூகப் பணியானது, பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ரி. பரமேஸ்வரனின் நேரடி வழிகாட்டலில், பாடசாலை அதிபர் ரி.கே.எம். சிராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இதில் வீரமுனை இராணுவ முகாம் வீரர்களின் ஒத்துழைப்புடன், பாடசாலை ஆசிரியர்களும், மாணவர்களும் இணைந்து அர்ப்பணிப்புடன் இப்பணியை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.