;
Athirady Tamil News

உயிருக்கு போராடிய மகன்: ஜாலியாக செல்போன் பார்த்த அம்மா

0

கர்நாடகாவில் கணவரை கொன்றுவிட்டு உயிருக்கு போராடிய மகனின் அருகில் செல்போன் பார்த்துக்கொண்டிருந்த பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவின் தார்வார் டவுன் பல்கலைகழக சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கிரண்- பிரியா தம்பதியினர் வசித்து வருகின்றனர், இருவருமே மருத்துவர்கள்.

இவர்களுக்கு நிகித் (வயது 10) என்ற மகன் இருக்கிறார். சம்பவ தினத்தன்று மாலை உறவினர்கள் பிரியாவை தொடர்பு கொண்ட போது கிரண் உறங்கிக்கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

அடுத்தடுத்த முறை அவர்கள் தொடர்பு கொண்ட போது இருவருமே அழைப்பு எடுக்கவில்லை, இதனால் பதறிப்போன உறவினர்கள் வீட்டிற்கு வந்த போது கிரண் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.

பக்கத்துஅறையில் நிகித் உயிருக்கு போராடிக்கொண்டிருக்க பிரியா செல்போன் பார்த்துக்கொண்டிருந்தார்.

உடனடியாக நிகித்தை மீட்ட உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர், தகவல்அறிந்து விரைந்து வந்த போலிசார் பிரியாவிடம் விசாரணை நடத்தியதில் தெளிவான பதில்கள் எதையும் கூறவில்லை.

எதற்காக கணவரை கொன்றார்? மகன் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் போது செல்போனில் மூழ்கியது ஏன்? மனநலம் எதுவும் பாதிக்கப்பட்டுள்ளாரா? என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.